Menu Close

வேதத்திலுள்ள பெரிய சீர்திருத்தங்கள்

1. மோசே நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தர் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளையெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து செய்து முடித்தான் – யாத் 39:32
2. சாமுவேல் மக்களை “விக்கிரகங்களை அழிப்போமென்றும், தங்கள் வாழ்வில் கர்த்தருக்கே முதலிடம் அளிப்போமென்றும்” வாக்குறுதி அளிக்க வைத்தார் -. 1சாமு 7:3, 4
3. தாவீது கர்த்தருடைய பெட்டியை ஜனங்களின் ஒத்துழைப்புடனும், கெம்பீர சத்தத்துடனும், எக்காளத் தொனியுடனும் கொண்டு வந்தான் – 2சாமு 6:15
4. யோசாபாத், மக்கள் உதவிக்காக தேவனை மட்டுமே சாருவோமேன்று தீர்மானிக்கச் செய்தார் – 2நாளா 20.
5. எசேக்கியேல் தேவாலயத்தைச் சுத்திகரிக்கச் செய்து, விக்கிரகங்களையும், விக்கிரக மேடைகளையும் தகர்த்தெறியச் செய்து தசமபாகம் முழுவதையும் தேவாலயத்துக்குக் கொண்டு வரச் செய்தார் – 2நாளா 29 – 32அதி
6. எஸ்றா மக்களை தங்கள் விசுவாச நம்பிக்கைக்கு ஒத்துவராத உறவுகளை முறித்துக் கொள்ளச் செய்தார். தேவவசனத்திற்கு நேராக மக்களைத் திருப்ப மக்களுடன் உடன்படிக்கை பண்ணினார் – எஸ்றா 9, 10அதி
7. நெகேமியா எஸ்றாவுடன் இணைந்து பாவங்களை ஜனங்கள் அறிக்கையிடச் செய்தார். நியாயப்பிரமாணத்தை வெளிப்படையாக வாசிக்கச் செய்தார். மக்கள் தங்கள் தேவனை முழு இருதயத்துடன் சேவிப்போம் என்று வாக்குறுதி அளிக்கச் செய்தார் – நெகே 10 அதி

Related Posts