1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்:
சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.”
2. செம்மையானவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
சங் 112:4 “செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்.”
3. நீதியுள்ளவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
நீதி 4:18 “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.”
4. உதாரத்துவமுள்ளவர்களுக்கு வெளிச்சம் உதிக்கும்:
சிறுமையுள்ளவனுக்கு ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுத்து, துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்து, வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரத்தைக் கொடுத்து, உன் மாம்சமானவனுக்கு ஒளிக்காமலிருந்தால் விடியற்கால வெளுப்பைப்போல வெளிச்சம் உதிக்கும் – ஏசா 58:7,8