1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”
2. ரூத்: ரூத் 1:16, 17 “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்திலே நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றான்.”
3. எலிசா: எலியா எடுத்துக்கொள்ளப் படும்போது எலிசா அவரை விடாமல் பெத்லகேமுக்கும், கில்காலுக்கும், எரிகோவுக்கும் அவருடன் போய் இரட்டிப்பான வரங்களைப் பெற்றுக்கொண்டான் – 2இரா 2:1 – 15
4. சூனேமியாள்: சூனேமியாளின் மகன் இறந்தவுடன் பிணத்தை வைத்துவிட்டு எலிசாவைக் கூப்பிடப்போனாள். எலிசா தன்னுடனிருந்த கேயாசியிடம் தன்னுடைய தடியைக் கொடுத்து “அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றார். ஆனால் அந்தத் தாயோ ”நான் உம்மை விடுகிறதில்லையென்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்.” அப்பொழுது எலிசா எழுந்திருந்து அவள் பின்னே சென்றான் – 2இரா 4:29, 30
5. யோபு: யோபு 13:15 “கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;”
6. சூலமித்தியாள்: உன் 3:1 – 4 “இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்துமநேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.”
“நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்துமா நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.” “நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.”
“நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்துமா நேசரைக் கண்டேன்; அவரை என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.”
7. பவுல்: இயேசுவினிமித்தம் எந்நேரமும் நாங்கள் கொல்லப்படுகிறோம், அடிக்கப் படுகிறோம். ஆனாலும் எந்த உபத்திரமும், வியாகுலமும், துன்பமும், பசியும், நிர்வாணமும், நாசமோசமும், பட்டயமும், மரணமும், உயர்வும், தாழ்வும் எங்களை கிறிஸ்துவை விட்டுப் பிரிக்க முடியாதென்கிறார் – ரோ 8 :35 – 39