1. உயிருக்கு உயிரானதைப் பலியாகக் கேட்பது: கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய ஒரே மகனை தகனபலியாக்கக் கட்டளையிட்டார் – ஆதி 22:2
2. முற்றுகையில் ஒரு அசாதாரணச் செயலை செய்யச் சொல்வது: அத்தனை கனமான தகர்க்க முடியாத எரிகோ கோட்டையைத் தகர்க்க யுத்த புருஷர்கள் அனைவரையும் சுற்றிவரக் கட்டளையிட்டார் – யோசு 6:3
3. போருக்குக் கிதியோன் புறப்படும் பொழுது: படையின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லிக் கட்டளையிட்டார் – நியா 7:7
4. எலியாவை ஏழை விதவையிடம் அனுப்பினார்: கர்த்தர் எலியாவை அதாவது சாப்பிடக்கூட வழியில்லாத ஒரு ஏழை விதவையைச் சார்ந்திருக்கக் கட்டளையிட்டார் – 1இரா 17 :9
5. சாரிபாத் விதவையிடம் இருக்கிற ஒருபிடி மாவையும் கேட்பது: சாரிபாத் விதவையிடம் இருந்த ஒருபிடி மாவில் அடையைப் பண்ணி வரச் செய்து பஞ்சகாலம் முடியும்வரை அந்த விதவையையும், மகனையும் போஷித்தார் – 1இரா 17:13, 14
6. பயனற்ற வேலையைச் செய்யச் சொல்வது: மோவாபியர் படையெடுத்து வருகையில் பள்ளத்தாக்கில் வாய்க்கால்களை வெட்டச் சொன்னார். (2இரா 3:16)
7. வெறுமையான செயலில் ஈடுபடச்சொன்னது: தீர்க்கதரிசியின் மனைவி கடனுக்காக எலிசாவிடம் அழுதபோது எலிசா அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலுமுள்ள அநேகம் வெறும் பாத்திரங்களை கேட்டு வாங்கி வா என்றார் – 2இரா 4 -3