• யாத் 20 : 4,5 “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.”
• “நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;”
• யாத் 23:13 “அந்நிய தேவர்களின் பேரைச் சொல்ல வேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.”
• யாத் 23:24 “நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப் போடுவாயாக.”
• யாத் 34:14 “அந்நிய தேவனை நீ பணிந்து கொள்ளவேண்டாம்.”
• யாத் 34:17 “வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்க வேண்டாம்.”
• உபா 4:23 “உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்.”
• உபா 6:14 “உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.”
• யோசு 23:7 “….அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.”
• 1சாமு 12:21 “விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே.”
• 2 இரா 17:35 “நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்து கொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,”
• 2இரா 17:37 “அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.”
• எரே 2 :11 “எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.”
• எரே 16:20 “ மனுஷன் தனக்கு தேவர்களை உண்டு பண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.”