Menu Close

வாக்குத்தத்தத்தின் காலம்

கர்த்தர் தனக்கென்று ஒரு ஜனத்தை எழுப்ப ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனை வேறுபடுத்தினார் – ஆதி 12:1-3 அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஸ்தீரியின் வித்து இவன் சந்ததியில் பிறக்க வேண்டும் (இயேசு) என்று வாக்குரைத்தார். ஆபிரகாமின் அழைப்பு முதல் கானான் யாத்திரையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுகிற வரை வாக்குத்தத்தத்தின் காலமாகும். மனிதன் விசுவாசத்திலும், கீழ்படிதலிலும் நிலைத்திருக்கிறானா எனக் கர்த்தர் சோதித்தார் – ஆதி 15:11. ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலர் (வாக்குத்தத்த சந்ததியார்) கானானிலிருந்து எகிப்துக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் பலுகிபெருகி எகிப்தின் அடிமைத்தனத்துக்குள்ளானார்கள். அங்கே கர்த்தர் மோசேயை எழுப்பி ஜனங்களை மறுபடியும் கானானுக்கு நடத்திச் சென்று சட்டதிட்டங்களைக் கொடுத்தார். அதோடு வாக்குத்தத்தத்தின் காலம் முடிவடைகிறது. கர்த்தர் தன் மீட்பின் திட்டத்தைக் குறிக்கும் வகையில் பஸ்காவை ஏற்படுத்தினார் – யாத் 12:11

Related Posts