Menu Close

லோத்து

1. ஆபிரகாமின் சகோதரனான ஆரானின் மகன் தான் லோத் – ஆதி 11:27

2. லோத்துக்கு இரு மகள்கள் – ஆதி 19:30

3. தனது உறவினரான ஆபிரகாம் உண்மையான தேவனைத் தெரிந்து கொண்டதை அறிந்து தானும் அவரைப் பின்பற்றினான் – ஆதி 12:4

4. தன் வீட்டிற்கு வந்தவர்களை உபசரித்தான் – ஆதி 19:1-3

5. தேவதூதர்களின் சொற்களை நம்பினான். அவற்றிற்கு கீழ்படிந்தான் – ஆதி 19 :14

6. தனது நகர மக்களின் பாவ வாழ்க்கையைக் கண்டு இருதயத்தில் வேதனையுடனிருந்த நீதிமான் – 2பேது 2:7, 8

7. சுயநலமாகத் தனது பார்வைக்குச் செழிப்பான பகுதியைத் தெரிந்து கொண்டவன் – ஆதி 13:10,11

8. அவரது மனைவி உலகப்பொருளை விரும்பியதால் திரும்பிப் பார்த்து உப்புத் தூணானாள் – ஆதி 19:26

9. தேவன் லோத்தை மலைக்குப் போகச் சொன்னபோது மறுத்து பக்கத்திலிருக்கும் ஊருக்குப் போனான் – ஆதி 19:20,21

10. அதன் பின் மலையிலே வாசம் பண்ணினான் – ஆதி 19:30

11. அங்கு அவனது பிள்ளைகள் அவனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவனுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றனர் – ஆதி 19:31-38

Related Posts