Menu Close

லாபானிடமிருந்து யாக்கோபு புறப்பட்டது

யாக்கோபு தன் தேசத்திற்குப் போகவேண்டுமென்றதால் லாபான் யாக்கோபுக்கு ஆடுகளைப் பிரித்துக் கொடுத்தான். அவன் ஆஸ்தி பெருகியது. யாக்கோபு தனக்குள்ள எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஈசாக்கிடம் புறப்பட்டான். அதை லாபானுக்கு அறிவிக்கவில்லை. இதை லாபான் கேள்விப்பட்டு, யாக்கோபைப் பின்தொடர்ந்து போய் கீலேயாத் மலைகளில் கண்டுபிடித்தான். யாக்கோபுக்குத் தீங்கு செய்ய வேண்டாமென்று கர்த்தர் லாபானிடம் எச்சரித்தார். ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களை அவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அதன் மேல் உட்கார்ந்து அதை மறைத்துக் கொண்டாள். தன் சொரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் லாபான் யாக்கோபோடு சமாதான உடன்படிக்கை பண்ணி பிரிந்து போனான். அந்த இடத்துக்கு மிஸ்பா என்று பெயரிட்டார்கள் – ஆதி 30:25 – 43, 31:1 – 55

Related Posts