ரூபன் யாக்கோபின் மூத்த குமாரன். எனவே அவன் சகோதரர் எல்லோருக்கும் தலைவனாக இருக்க வேண்டியவன். எனினும் அவன் தன் தந்தையின் மறுமனையாட்டியாகிய பில்காளுடன் விபச்சாரம் பண்ணியதன் காரணமாக ஆவிக்குரிய தலைமை அதிகாரத்தை என்றென்றைக்கும் இழந்து விட்டான் – ஆதி 35:22 அதன்பின் அவன் தன் சகோதரர்களைக் கட்டுப்படுத்தவோ, அதிகாரம் செலுத்தவோ முடியவில்லை. அவனுடைய சேஷ்டபுத்திரபாக உரிமை எடுத்துக் கொள்ளப்பட்டது – ஆதி 49:3,4 1 நாளா 5:1 அவன் தன்னுடைய சுதந்தரத்தையும், தலைமைத்துவ பதவியையும் என்றென்றைக்கும் இழந்து விட்டான்.