ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என எண்ணியதால். ரூத் போவாஸ் என்பவனின் வயல்களில் கதிர் பொறுக்கினாள். போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான். ரூத் போவாசுக்கு ஒபேத்தைப் பெற்றாள். அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். ரூத் முற்றிலும் கர்த்தரைச் சார்ந்து கொண்டதால் ஆசீர்வதிக்கப்பட்டாள். அவளுடைய சந்ததியில் இயேசு பிறந்தார் – ரூத் 1:1 – 22, 2:1-23, 3:1 –18, 4:12 – 17