Menu Close

யோபு இழந்தவைகள்

1. முதலில் செல்வம் பாதிக்கப்பட்டது: எருதும், கழுதையும் அக்கால செல்வங்கள். அவைகளை வெட்டிப் போட்டார்கள். வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டனர் – யோபு 1:14, 15
2. இரண்டாவது உணவும், உடையும் பாதிக்கப் பட்டது: ஆடுகள் உணவுக்கும், உடைக்கும் பயன்படுத்தினர். தேவனுடைய அக்கினி விழுந்து ஆடுகளையும், வேலையாட்களையும் சுட்டெரித்தது – யோபு 1:16
3. மூன்றாவதாக வாணிபம், பயணம், பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்பட்டன: ஒட்டகங்கள் பயண வாகனமாகவும் – ஆதி 24:10 வாணிபப் பொருள் எடுத்துச் செல்லும் வாகனமாகவும் – ஆதி 37:25, 28 போர் வாகனமாகவும் – நியா 7:12 பயன்படுத்தப்பட்டன. கல்தேயர் வேலைக்காரர்களை வெட்டி ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போனார்கள் – யோபு 1:17
4. நான்காவதாக குடும்ப அங்கத்தினர் பாதிக்கப்பட்டனர். பெருங்காற்றினால் யோபுவின் வீடு விழுந்து பிள்ளைகள் அனைவரும் இறந்தனர் – யோபு 1:18 – 20

Related Posts