Menu Close

யோனா தீர்க்கதரிசி பற்றி ஒரு பார்வை

தனது ஊழியத்தினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் மனந்திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தார். தனது சொற்களா, தனது பெயரா, தனது புகழா, மக்களின் இரட்சிப்பா எது முக்கியம் என்பதை யோனா சரிவர அறிந்திருக்கவில்லை. தனது தவறை மறந்து, மற்றவர்கள் பாதிக்கப்பட்டதை அறிந்தும் கோபமடைந்தார். யோனா கோபமாக எரிச்சலாக இருக்கும்பொழுதும் கர்த்தர் அவனிடத்தில் பேசினார். நினிவே மக்கள் மனந்திரும்பியதால் இனி நினிவேயை அழிக்கமாட்டார் என்று அறிந்திருந்தும், அதைக் காணக் காத்திருந்தது முரண்பாடான செயல். இந்த நூலின் முக்கிய கருத்தே மக்கள் யாவரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே.

Related Posts