கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல் யோனா உயிரோடிருக்கும்படி தேவன் அற்புதம் செய்தார். மீனின் வயிற்றில் தான் உயிரோடிருப்பதை அறிந்து யோனா தேவனை நோக்கிக் கூப்பிட்டான். அவன் மரித்தவனைப் போலிருந்தும் தேவன் அவன் ஜெபத்தைக் கேட்டார். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டு, அது யோனாவைக் கரையிலே கக்கிப் போடச் செய்தார் – யோனா 1:15 – 2:10