Menu Close

யோனாவிற்கும் லோத்துவிற்கும் உள்ள வேறுபாடு

1. தேவனின் சொல்படி யோனா நினிவேக்குச் செல்லாமல் தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் ஏறினான். அதனால் தேவன் கடல் கொந்தளிப்பை உண்டு பண்ணினார். மாலுமி யோனாவை சமுத்திரத்தில் தூக்கிப் போட்டான். அப்பொழுது கர்த்தர் அவனை விழுங்க மீனுக்குக் கட்டளையிட்டார். மீனின் வயிற்றில் யோனா மூன்று நாட்கள் இருந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு மனந்திரும்பினான். எனவே தேவன் மனம் மாறி யோனாவை உயிரோடு வெளியே வரச் செய்து நினிவேக்கு அனுப்பினார் – யோனா 1, 2 அதிகாரங்கள்

2. லோத் ஆபிரகாமை விட்டுப் பிரியும் பொழுது தேவனிடம் கேட்காமல், சோதோம்கொமோராவைத் தெரிந்து கொண்டு அங்கு தங்கினான். அங்குள்ள ஜனங்களின் பாவத்தினால் அதை அழிக்க நினைத்தார். ஆனால் லோத்தின் குடும்பத்தைக் காப்பாற்ற தனது தூதர்களை அனுப்பி அவர்களை வெளியே கொண்டு வந்து, “பின்னிட்டுப் பார்க்காமல், சமபூமியில் எங்கும் நில்லாமல் நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப் போ “என்றார். ஆனால் லோத்தோ “மலைக்கு ஓடிப் போக என்னால் முடியாது. தீங்கு என்னைத் தொடரும். நான் மரித்துப் போவேன்.” என்று தன் சுயசித்தத்தால் பதிலளித்து தன் வாழ்க்கையில் தோல்வியுற்று ஒரு கெபியில் பிள்ளைகளுடனிருந்தான் – ஆதி 19:15-38

இருவரும் தேவ வார்த்தையைக் கேட்காமலிருந்தாலும் யோனா கடைசியில் மனந்திரும்பினான். ஆனால் லோத்தோ கடைசிவரை மனந்திரும்பவில்லை.

Related Posts