யோனா நினிவேக்குச் சென்று இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று பிரசங்கம் பண்ணினான். அதைக் கேட்ட ஜனங்களும், ராஜாவும், மிருகங்களும் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்து உபவாசமிருந்தனர். அவர்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினார்களென்று கர்த்தர் அறிந்து, அவர்களுக்குச் செய்யவிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு செய்யாதிருந்தார் – யோனா 3:1–10