கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை ஒரே நாளில் படர்ந்து வளரப் பண்ணினார். யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளில் கர்த்தர் ஒரு பூச்சியின் மூலம் ஆமணக்குச்செடியை அழித்தார். கடும்வெயிலினால் யோனா சோர்ந்துபோய்
“நான் உயிரோடிருப்பதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.” அதற்குக் கர்த்தர் “நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு ராத்திரியிலே முளைத்ததும், ஒரு ராத்திரியிலே அழிந்து போனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே”
“வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக பரிதபியாலிருப்பேனா என்றார்.” – யோனா 4:1 – 11