Menu Close

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44

2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி 39 : 2, 3, 21, 23

3. யோசேப்பின் ஞானம் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கக் கூடியதாயிருந்தது – ஆதி 41:16-37

4. யோசேப்பு தேவ ஆவியைப் பெற்றவனாயிருந்தான் – ஆதி 41:38

5. ஞானமுள்ள யோசேப்பைப் போல ஒருவனும் இல்லை என்று ராஜாவால் நற்சாட்சி பெற்றான் – ஆதி 41:38, 39

6. தன் குடும்பத்துக்கும், எகிப்து தேசத்துக்கும் படியளக்கிற இரட்சகனாயிருந்தான் – ஆதி 45:7, 8

7. பல தேசங்களுக்கும் படியளந்தான் – ஆதி 41:57

8. பின்னால் சம்பவிக்கப் போகிறவைகளை தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தவன் – ஆதி 41:28-31

9. இஸ்ரவேலருக்கு பின்னால் கிடைக்கப் போகிற விடுதலையை தன் அந்நிய தேசத்தில் இருக்கும்பொழுதே தெரிவித்தான் – ஆதி 50:24

10. கர்த்தர் யோசேப்புக்கு சகல வருத்தத்தையும் மறக்கும்படி செய்தார் – ஆதி 41:51, 52

11. யோசேப்பு கனிதரும் செடி என தகப்பனிடமிருந்து ஆசிகளைப் பெற்றான் – ஆதி 49:22-26

12. யாக்கோபின் குமாரர்களில் யோசேப்பின் பெயர் மாத்திரம் விசுவாச வீரர்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கிறது – எபி 11:22

Related Posts