கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா அது தெரியாமல் யுத்தம் பண்ண வந்த போது கர்த்தர் யோசுவாவை நோக்கி அவன் கையிலிருக்கும் ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டச் சொன்னார். அவன் கையை நீட்டிய உடனே பதிவிருந்தவர்கள் வந்து அதைப் பிடித்து பட்டணத்தைத் தீக்கொழுத்தினார்கள். அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடி அவர்களை வெட்டி போட்டு ஆயியின் ராஜாவைப் பிடித்து யோசுவாவினிடத்தில் கொண்டு வந்தார்கள். யோசுவா ஆயியின் ராஜாவைத் தூக்கிலிட்டான் – யோசு 8:1 –29