யோசுவாவின் வெற்றிகளைக் கண்ட கிபியோனியர் தந்திரமாய் யோசுவாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். அவர்கள் யோசுவாவிடம் தூர தேசத்தாரைப்போல நடித்து தந்திரமாய்ப் பேசினார்கள். யோசுவா அவர்களை உயிரோடே காப்பாற்றும்படியான உடன்படிக்கை பண்ணினான். மூன்று நாட்களுக்குப் பின் அவர்கள் தங்கள் அயலார் என்று அறிந்து கொண்டான். ஆனாலும் அவர்களைக் கொன்றுவிடாமல் பணிவிடைக்காரர்களாய் வைத்தான் – யோசு 9:1 – 27