1. விசுவாசமிக்கவர்: தேசத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் தான் நல்ல தேசம் என்றனர் – எண் 14:6-8
2. ஆவிக்குரிய வாஞ்சையடையவர்: ஆவிக்குரிய உணர்வுடன் யோர்தானை பின்னிட்டுத் திரும்பச் செய்தார். ஆவிக்குரிய வாஞ்சையுடன் இரும்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினார் – யோசு 3:15, 8:30
3. கர்த்தரின் சித்தத்தில் நாட்டம் கொண்டவர்: தன் முன் நின்ற தேவதூதனிடம் அவருடைய சித்தத்தைக் கேட்டான் – யோசு 5:14
4. துணிவு மிக்கவர்: துணிவுடன் ஐந்து ராஜாக்களை வென்றார் – யோசு 10:25
5. கீழ்படிந்து நடந்தவர்: மோசேக்குக் கீழ்படிந்து கடைசிவரை நடந்தார் – யோசு 11:15
6. தீர்மானத்தில் உறுதியாயிருந்தவர்: நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற உறுதியுடனிருந்தவன் – யோசு 24:15