Menu Close

யாக்கோபுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்கள்

1. ஆதி 28:13,14,15 “நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.”

2. “உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும் வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.”

3. “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.”

4. ஆதி 31:3 “நான் உன்னோடே கூட இருப்பேன்.”

5. ஆதி 32:9 “உனக்கு நன்மை செய்வேன்.”

6. ஆதி 32:12 “நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப் போல மிகவும் பெருகப் பண்ணுவேன்.”

7. ஆதி 35:11, 12 “நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.”

8. “நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்.”

9. ஆதி 46:3, 4 “நீ எகிப்து தேசத்துக்குப் போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னை பெரிய ஜாதியாக்குவேன்.”

10. “நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்.”

11. ஆதி 48:4 “நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்த தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன்.”

Related Posts