Menu Close

யாக்கோபின் விவாகம்

யாக்கோபு ஆரானில் ஒரு கிணற்றண்டை வந்தான். அங்கே ராகேலை சந்தித்து கிணற்றின் வாயிலிலிருந்த கல்லைப் புரட்டி ராகேலின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ராகேல் அதை தன் தகப்பனாகிய லாபானிடம் சொன்னான். லாபான் எதிர் கொண்டு ஓடி வந்து யாக்கோபை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு லாபானின் வீட்டில் தங்கி அவனுடைய ஆடுகளை மேய்த்தான். லாபானுக்கு லேயாள், ராகேல் என்னும் இரண்டு குமாரத்திகள் இருந்தனர். லாபான் யாக்கோபிடம் உனக்கு என்ன சம்பளம் வேண்டுமென்று கேட்டான். அதற்கு யாக்கோபு அழகாயிருந்த ராகேலின் மேல் பிரியப்பட்டு அவளுக்காக ஏழு வருடம் உம்மிடம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான் சம்மதித்தான். ஆனால் லாபான் ராகேலுக்குப் பதில் லேயாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யாக்கோபு லாபானிடம் “ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றதால் ஏழு நாட்களுக்குப் பின் லாபான் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். அவளுக்காக யாக்கோபு மறுபடியும் ஏழு வருடம் லாபானிடம் வேலை செய்தான். யாக்கோபு தன் சகோதரனை ஏமாற்றியதால், தன் மாமனால் ஏமாற்றப்பட்டான் – ஆதி 29:1 – 31

Related Posts