கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு அனுப்பினதால் அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். அப்பொழுது கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கி வைக்க வேண்டுமென்றும், பாம்பினால் கடிபட்டவன் அதை நோக்கிப் பார்த்தால் பிழைப்பான் என்றும் கூறினார். இந்த வெண்கலசர்ப்பம் இயேசுவை நினைவூட்டுகிறது. இதைத் தான் இயேசு “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்பட வேண்டும்.” என்றார் – யோ 3:14, 15 இது எதை உணர்த்துகிறதென்றால் தங்களுடைய பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இரட்சிப்பை பெற விரும்பும் மக்கள் கிறிஸ்துவின் மூலம் தேவ வார்த்தையை விசுவாசித்து அதற்கு முற்றிலுமாகக் கீழ்படிய தங்கள் இருதயங்களைத் திருப்ப வேண்டும் – எண் 21:9