Menu Close

மோசே பெற்றுக் கொண்ட இரண்டு கற்பலகைகளுக்குமுள்ள வேறுபாடு

• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18 மோசே இறங்கி வந்தபோது இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் செய்த பொன் கன்றுக்குட்டிக்கு முன்பாக நடனமாடுவதைக் கண்டு கோபமுற்றவனாய் அக்கற்பலகைகளை வீசி எறிந்து உடைத்து விட்டான் – யாத் 32:19 ஏறக்குறைய மூவாயிரம் பேர் அந்நாளில் செத்தார்கள் – யாத் 32:28

• இரண்டாவது தடவை தேவசமூகத்துக்குச் சென்றபோது கர்த்தர் முந்தின கற்பலகைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளைக் கொண்டு வரச்சொன்னார் – யாத் 34:1 அதில் பத்து கற்பனைகளை எழுதி அவனிடத்தில் கொடுத்தார் – உபா 10:3,4 இந்த இரண்டு கற்பலகைகளை ஆயத்தப்படுத்துவதென்பது நாம் நம்முடைய மனதையும், இருதயத்தையும் ஆயத்தப்படுத்துவதை குறிக்கிறது. நாம் அவ்வாறு ஆயத்தப்படுத்திக் கொண்டு தேவ சமூகத்திற்குச் செல்வோமென்றால் தேவன் அதில் தமது பிரமாணங்களை எழுதுவார் – எபி 8:10

• முதலில் மோசே தேவனுடைய மகிமையைத் தரிசிக்காமல் கொண்டு வந்தான். அழிவும் மரணமும் உண்டாயின். இரண்டாவது தடவை அழிவு உண்டாகாமல் ஜீவன் உண்டானது. அது ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தது. அதற்குக் காரணம் மோசே தேவனுடைய மகிமையைக் கண்டிருந்ததேயாகும். தேவ மகிமையால் தான் மோசேயின் முகம் பிரகாசித்தது – யாத் 34:28-30

Related Posts