பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும், நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்கப்பட வேண்டும். மாம்சத்தை நெருப்பில் சுட்டு புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான கீரையோடும் புசிக்க வேண்டும். வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும்போது அவன் அந்த வீட்டுக்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த நாளை பண்டிகை நாளாக கொண்டாட தேவன் கட்டளையிட்டார் – யாத் 12 :3-12