1. மோசே தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கு கர்த்தருடைய தூதனானவர் எரிகிற முட்செடியில் தரிசனமானார் – யாத் 3:1-4
2. சவுல் சீஷர்களைப் பயமுறுத்திக் கொலை செய்யப் போகும் பொழுது தமஸ்குவுக்குப் பக்கத்தில் வானத்திலிருந்து ஒளி பிரகாசித்து இயேசுவின் சத்தத்தைக் கேட்டான் – அப் 9:1-4
3. ஆபிரகாம் மெசப்போத்தாமியா நாட்டிலே இருக்கும் பொழுது மகிமையின் தேவன் தரிசனமானார் – அப் 7:2
4. யாக்கோபு தந்தையையும், தமையனையும் ஏமாற்றி பயந்து லாபானின் வீட்டுக்குச் செல்லும் வழியில் லூஸ் என்ற இடத்தில் கல்லைத் தலைக்கு வைத்துப் படுத்த பொழுது வானத்தை எட்டும் ஏணியையும் அதற்கு மேலாக கர்த்தர் நின்று பேசியதையும் பார்த்தார் – ஆதி 28:10 –22