Menu Close

மோசே தேவனை சாந்தப்படுத்திய இடம்

• மோசே சீனாய் மலையிலிருந்த போது ஆரோனின் வழியாக ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி வழிபட்டனர். இதனால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார். யாத் 32:11-14 “மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகாபலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றி எரிவதென்ன?”

• “மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின் மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்கு தீங்குசெய்யும் பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்வானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு, அவர்கள் மேல் பரிதாபங்கொள்ளும்.”

• “உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக் கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.” “அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங் கொண்டார்.”

Related Posts