1. மோசேயின் கோல் பாம்பானது – யாத் 4:3, 7:10
2. பாம்பான கோல் பழைய நிலையை அடைந்தது – யாத் 4:4
3. மோசேயின் கையில் குஷ்டம் வந்தது – யாத் 4:6,7
4. எகிப்தியரின் தண்ணீரை இரத்தமாக்கினார் – யாத் 4:9
5. எகிப்து நதியின் நீர் இரத்தமானது – யாத் 7:20
6. எகிப்து ஜனங்களை தவளைகளால் வாதித்தார் – யாத் 8:6, 13
7. எகிப்து ஜனங்களின் மேல் பேன்களை வரவழைத்தார் – யாத் 8:16-19
8. எகிப்தியர் மேல் வண்டுகளை ஏவி விட்டார் – யாத் 8:24
9. எகிப்தியரின் விலங்குகளுக்கு நோயை வரப்பண்ணினார் – யாத் 9:3
10. எகிப்தியரின் மேல் கொப்புளங்களை வரப்பண்ணினார் – யாத் 9:10
11. எகிப்தில் கல் மழையைப் பெய்யப் பண்ணினார் – யாத் 9:23
12. எகிப்தின் பயிர்களை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டார் – யாத் 10:13-19
13. எகிப்து தேசமெங்கும் காரிருள் உண்டாகச்செய்தார் – யாத் 10:22
14. எகிப்தியரின் தலைபிள்ளைகளை சங்காரம் பண்ணினார் – யாத் 12:29
15. செங்கடலைப் பிளக்கப் பண்ணி வெட்டாந்தரையாக்கினார் – யாத் 14:21
16. அதே செங்கடலில் எகிப்தியரை சங்காரம் பண்ணினார் – யாத் 14:26-28
17. மாராவின் கசப்பு நீரை இனிப்பாக்கினார் – யாத் 15:25
18. கன்மலையிலிருந்து நீர் பெருகும்படி செய்தார் – யாத் 17:6
19. அமலேக்கியரை அழித்தார் – யாத் 17:8-16
20. கோராகு கலகத்தில் அவர்களை அழித்தார் – எண் 16:32
21. ஆரோனின் கோலைத் துளிர்க்கச் செய்தார் – எண் 17:8
22. காதேசில் வைத்து கன்மலையில் தண்ணீரை வரவழைத்தார் – எண் 20:11
23. வெண்கல சர்ப்பத்தைப் பார்க்க வைத்து விஷத்தை முறிக்கச் செய்தார் – எண் 21:8