1. முதல் யாத்திரை: யாத் 19:3-8 தேவன் மோசேயை நோக்கி “உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து வந்தேன். நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்தாயிருப்பீர்கள், பரிசுத்த ஜாதியுமாயிருப்பீர்கள்” என்றார். இந்த வார்த்தைகளை மோசே ஜனங்களிடம் கொண்டு வந்தான்.
2. இரண்டாம் யாத்திரை: யாத் 19:9-15 கர்த்தர் மோசேயோடு பேசுவதை ஜனங்கள் கேட்டு விசுவாசிக்கும்படி ஜனங்களை இரண்டு நாள் ஆயத்தப்படுத்தச் சொன்னார். மூன்றாம் நாள் மலையடிவாரத்தில் ஜனங்கள் வருவதற்கான எல்லையும் குறிக்கப்பட்டது.
3. மூன்றாம் யாத்திரை: யாத் 19:18, 19 ; 20:1-20 மூன்றாவது நாள் சீனாய் மலையில் இடிமுழக்கங்களும், மின்னல்களும், கார்மேகமும், பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று. கர்த்தர் அக்கினியில் இறங்கினார். மலை புகைக்காடானது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. மோசே பேசினான். தேவன் அவனுக்கு மறுமொழி கொடுத்தார். தேவ கட்டளைப்படி மோசேயும், ஆரோனும் மலையின் மேல் ஏறிப் போனார்கள். பத்து கற்பனைகளும் கொடுக்கப்பட்டது.
4. நான்காவது யாத்திரை: யாத் 20:21-25,21-23அதி கர்த்தர் மோசேயோடு பலிபீடத்திற் கானவைகளைக் குறித்துப் பேசினார். மேலும் அவர் கூறிய மற்ற பிரமாணங்கள் எஜமானன், ஊழியக்காரன், மற்றவர்களைக் காயப்படுத்துதல், உடைமைகள், உரிமைகள், பிறன், ஓய்வுநாள், மூன்று பண்டிகைகள் இவைகளைப் பற்றியது. பின்பு இஸ்ரவேலரோடு தேவன் உடன்படிக்கை பண்ணினார்.
5. ஐந்தாவது யாத்திரை: யாத் 24:1,2, 24:16-18, 25-31 அதி இஸ்ரவேலின் மூப்பர்கள் சீனாய் மலையில் ஏறினார்கள். மோசே மட்டும் சமீபித்து வர அழைக்கப்பட்டான். மற்றவர்களை அங்கேயே இருக்கக் கூறினார். அப்பொழுது ஒரு மேகம் மலையை மூடிற்று. ஏழுநாட்களுக்குப் பின் தேவன் பேசத்தொடங்கினார். மோசே நாற்பது நாட்கள் இரவும், பகலும் அங்கேயே இருந்தான். ஆசரிப்புக் கூடார வேலைகளைப் பற்றியும், ஆசரிப்பு ஊழியத்தைப் பற்றியும் பேசினார். பேசி முடித்த பின் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட இரண்டு சாட்சியின் பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
6. ஆறாவது யாத்திரை: யாத் 32:30-35, 34:1-3 மோசே மறுபடியும் கர்த்தரிடத்தில் ஏறிப் போனான். கர்த்தரிடத்தில் ஜனங்களுக்காக பரிந்து பேசினான். கடைசியாக அவர்களுக்காக தன் பெயரை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடச் சொன்னான். கர்த்தர் மோசேயோடு இரண்டு கற்பலகைகளை உண்டு பண்ணச் சொன்னார்.
7. ஏழாவது யாத்திரை: யாத் 34:4-23 கர்த்தரின் கட்டளையின்படி மோசே செய்த இரண்டு கற்பலகைகளை எடுத்துக் கொண்டு சீனாய் மலையின் மேல் ஏறினான். கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி மோசேயின் அருகில் நின்று பேசினார். கர்த்தர் மோசேக்கு முன் கடந்து போனார். மோசேயோடு பேசி புதுக் கட்டளைகளைக் கொடுத்தார். கர்த்தர் கொடுத்த பத்து கற்பனைகளை மோசே கற்பலகைகளில் எழுதினான். மோசே நற்பது நாட்கள் அங்கே இருந்தான்.