இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன் கோலை எடுத்துக் கொண்டு ஆரோனோடு கூட கன்மலையைப் பார்த்துப் பேசு. அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்.” என்றார். ஆனால் மோசே ஜனங்களைக் கூடிவரச் செய்து தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான். தண்ணீர் புறப்பட்டது. கன்மலையைப் பார்த்து கர்த்தர் பேசச் சொன்னார். ஆனால் மோசேயோ கன்மலையை இரண்டு தரம் அடித்தார். எனவே கர்த்தர் மோசே, ஆரோனிடம் “நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியால் இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவரைக் கொண்டு போவதில்லை” என்றார் – எண் 20:7-13