லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர் அவனைக் கொல்லாமல் ஒரு நாணல் பெட்டியில் வைத்து நதியோரமாய் நாணலுக்குள் வைத்தார்கள். பார்வோன் குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ணும்படி வந்தாள். அவள் பெட்டியைப் பார்த்து குழந்தை அழகுள்ளது என்று கண்டு அதைத் தனக்காக வளர்த்திட ஆள் தேடினாள். சொந்த தாயிடமே பிள்ளையை ஒப்படைத்தாள். பார்வோன் குமாரத்தியின் மகனாக அரண்மனையில் மோசே வளர்க்கப்பட்டான் – யாத் 6:20, 2:1-10