மோசே கர்த்தரிடம் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று சொன்ன போது, கர்த்தர் அவன் கையிலிருக்கும் கோலைத் தரையிலே போடச் சொன்னார். அது பாம்பாக மாறியது. மோசே அதைக் கண்டு விலகி ஓடும்போது பாம்பினுடைய வாலைப் பிடிக்கச் சொன்னார். பிடித்தவுடன் அது கோலாயிற்று. இரண்டாவது அவனுடைய கையை மடியிலே போடச் சொன்னார். அவனுடைய கையில் வெண் குஷ்டம் பிடித்திருந்தது. திரும்பவும் கர்த்தர் கையை மடியிலே போட்டு வெளியே எடுக்கச் சொன்னார். கை முன்னிருந்தது போலாயிற்று. இந்த இரண்டு அடையாளங்களையும் ஜனங்களிடம் காட்டக் கூறினார். அதற்கும் ஜனங்கள் நம்பாவிட்டால் நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றும் பொழுது இரத்தமாகும். இதுவே அடையாளம் என்றார் – யாத் 4 : 1-9