Menu Close

மோசேக்கும் கர்த்தருக்குமுள்ள ஐக்கியம்

• யாத் 19:3 “மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டார்.”

• யாத் 19:20 “கர்த்தர் சீனாய்மலையிலிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.”

• யாத் 20:21 “ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.”

• யாத் 24:2 “மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.”

• யாத் 25:22 “கிருபாசனத்தில் நான் உன்னை சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப் பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளை எல்லாம் உன்னோடே சொல்லுவேன்.”

• யாத் 31:18 “சீனாய்மலையில் கர்த்தர் மோசேயோடே பேசி முடித்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.”

• யாத் 33:9 “மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடார வாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.”

• லேவி 1 :1 “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.”

Related Posts