மோசே கேட்டுக் கொண்ட ஆசீர்வாதம் உலகப்பிரகாரமான கானானுக்குள் செல்வதாகும். ஆனால் தன் ஊழியக்காரனுடைய பிரயாசங்களை மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல – எபி 6:10 மோசேயின் இந்த ஜெபம் கேட்கப்படவில்லை என நாம் கருதுகிறோம். மோசே கேட்டதை விட மிக உன்னதமான ஒரு அனுபவத்தை தேவன் அவனுக்கு ஆயத்தப்படுத்தியிருந்தார். மோசே மரித்த பின் ஆவிக்குரிய பிரகாரமாக கிறிஸ்துவோடு மகிமையிலே தான் வாஞ்சித்த கானான் தேசத்திற்குள் காணப்படும் மாபெரும் பேறு மோசேக்கு வைக்கப்பட்டிருந்தது – மத் 17:1-5 உயர்ந்த மலையில் இயேசு மறுரூபமாகும் போது மோசேயும் எலியாவும் அவரோடு பேசிக் கொண்டிருந்ததை பேதுருவும், யோவானும், யாக்கோபும் கண்டனர். இது அப்பொழுது மோசேக்குப் புரியவில்லை – 1கொ 2:9ல் கூறியுள்ளபடி “தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இதயத்தில் தோன்றவுமில்லை.” தேவன் அவனிடம் “இந்த காரியத்தைக் குறித்து என்னிடம் பேசவேண்டாம்.” என்றார் – உபா 3:26 நாம் வேண்டிக் கொள்வதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக நமது பரமபிதா தருகிறாரென்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு – எபே 3:20