Menu Close

மூடனைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 1:7 “மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.”
▪ நீதி 10 :14 “மூடனுடைய வாய்க்கு கேடு சமீபத்திருக்கிறது.”
▪ நீதி 10:21 “மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.”
▪ நீதி 10:23 “தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;”
▪ நீதி 11:12 “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;”
▪ நீதி 12:15 “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்;”
▪ நீதி 12:16 “மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;”
▪ நீதி 12:23 “மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்திப்படுத்தும்.”
▪ நீதி 13:16 “மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.”
▪ நீதி 13:19 “தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு;”
▪ நீதி 13:20 “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”
▪ நீதி 14:7 “மூடனுடைய முகத்துக்கு விலகிப் போ;”
▪ நீதி 14:8 “மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.”
▪ நீதி 14:16 “மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.”
▪ நீதி 14:18 “பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;”
▪ நீதி 14:24 “மூடரின் மூடத்தனம் மூடத்தனமே;”
▪ நீதி 14:33 “மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.”
▪ நீதி 15:2 “மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.”
▪ நீதி 15:5 “மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம் பண்ணுகிறான்;”
▪ நீதி 15:7 “மூடரின் இருதயமோ அறிவை இறைக்காது.”
▪ நீதி 15:14 “மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.”
▪ நீதி 15: 20 “மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம் பண்ணுகிறான்.”
▪ நீதி 15:21 “மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;”
▪ நீதி 16:22 “மதியீனரின் போதனை மதியீனமே.”
▪ நீதி 17:18 “புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.”
▪ நீதி 17:21 “மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.”
▪ நீதி 17:24 “மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.”
▪ நீதி 17:25 “மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.”
▪ நீதி 18:2 “மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.”
▪ நீதி 18:6 “மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.”
▪ நீதி 18:7 “மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு; அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.”
▪ நீதி 19:3 “மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்;”
▪ நீதி 19:13 “மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;”
▪ நீதி 19:29 “மூடருடைய முதுகுக்கு அடிகள் ஆயத்தமாயிருக்கிறது.”
▪ மூடன் மாறுபாடுள்ள உதடுள்ளவன் – நீதி 19:1
▪ நீதி 20:3 “மூடனானவன் வழக்குகளில் தலையிட்டுக் கொள்வான்.”
▪ நீதி 21:20 “மூடன் எண்ணையையும், திரவியத்தையும் செலவழித்துப் போடுகிறான்.”
▪ நீதி 24:7 “மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.”
▪ நீதி 29:9 “ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும், சிரித்தாலும் அமைதியில்லை.”
▪ நீதி 29:11 “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;”
▪ நீதி 28:26 “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்;”
▪ நீதி 26:1 “மூடனுக்கு மகிமை தகாது;”
▪ நீதி 26:5 “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடு;”
▪ நீதி 26:6 “மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக் கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.”
▪ நீதி 26:7 “மூடரின் வாயிலிலுள்ள உவமைச் சொல்லும் குந்தும்.”
▪ நீதி 26:11 “மூடன் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.”
▪ நீதி 27:22 “மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.”

Related Posts