Menu Close

மாராவின் கசப்பை மாற்றிய கர்த்தர்

இஸ்ரவேலர் சூர் வனாந்தரத்திற்கு வந்த போது மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். பின் அவர்கள் மாராவிற்கு வந்த போது, அந்த தண்ணீர் கசப்பாயிருந்தது. ஜனங்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராய் மாறிற்று. அப்பொழுது கர்த்தர் ஒரு வாக்குக் கொடுத்தார்.

“நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.” – யாத் 15:22-27

Related Posts