1. ஏலியின் குமாரர்கள் செய்த அக்கிரமத்தை ஏலி அடக்காமற் போனதினிமித்தம் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் கொடுத்தார். அந்தக் கோபம் பலியினாலோ, காணிக்கையினாலோ நிவிர்த்தியாவதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டார் – 1சாமு 3:13, 14 அதன்படி ஏலியும், அவனுடைய மகனும் மருமகளும் இறந்தனர் – 1சாமு 4 :11, 18 – 22
2. யாராவது பரிசுத்தாவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை – மத் 12:32
3. கர்த்தருடைய வார்த்தையை மீறச்சொல்லி சர்ப்பமானது ஏவாளை ஏவி விட்டதால் “வயிற்றினால் ஊர்ந்து, உயோரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்” என்று மீட்பு இல்லாதபடி சாபம் பெற்றார் – ஆதி 3:14
4. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கு மீட்பில்லாததால் நான்றுகொண்டு செத்தான் – மத் 27:1 – 5