Menu Close

போலி மேய்ப்பரின் பண்புகள்

1. சுகபோகப் பிரியர்கள்: ஏசா 56:10 – 12 “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய் புலம்புகிறவர்கள், படுத்துக் கொள்ளுகிறவர்கள், நித்திரைப்பிரியர்;”
“திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக் கொண்டிருக்கிறான்.”
“வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையதினம் இன்றையதினம் போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.”
2. ஆட்டு மந்தையை சிதறப்பண்ணுவர்: எரே 23:2 “நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்தி விட்டீர்கள்;”
3. ஆடுகளை வழிதவறப் பண்ணுவர்: எரே 50:6 “என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்து விட்டார்கள்.”
4. ஆடுகளை மேய்க்காமற் போகிறார்கள்: எசே 34:2, 3 “கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்க வேண்டும்.”
“நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற் போகிறீர்கள்.”
5. ஆபத்தில் ஆடுகளை விட்டு ஓடுவர்: யோ 10:12 “மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுதே ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.”

Related Posts