வாக்குத்தத்த நாடாகிய கானானில் குடியேறிய இஸ்ரவேலர் கர்த்தரின் உடன்படிக்கைகளை மீறி பாவ வழிகளில் முன்னேறியதால் கர்த்தரின் தூதன் வந்து அவர்களது பாவத்தையும், கீழ்ப்படியாமையையும் நினைவூட்டினார். “அந்நியர் உங்களை நெருக்குவார்கள் என்றும், அவர்கள் தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள்” என்றும் தூதன் கூறியவுடன் ஜனங்கள் அழுதார்கள். அவ்விடத்திற்கு போகீம் என்று பெயரிட்டு அங்கு கர்த்தருக்குப் பலியிட்டனர் – நியா 2:1 – 5