இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும். பெலிஸ்தியரைப்போல இவர்களும் இஸ்ரவேலரைத் தாக்கிச் சிறைப்பிடித்து ஏதோமியருக்கு விற்றுப்போட்டனர் – யோவே 3:8 அதனால் தேவன் தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்தி அதோதின் அரண்மனைகளைப் பட்சிக்கச் செய்வார். கி.மு 332ல் மகா அலெக்ஸ்சாண்டரால் தீருவின் பிடிக்க முடியாத தீவுப்பகுதி பிடிக்கப்பட்டது – ஆமோ 1:9, 10