பெல்ஷாத்ஷார் தேவனுக்கு விரோதமாகத் தவறு பண்ணியவுடன் சுவரில் கையுறுப்பு எழுதிற்று. அதன் விளக்கத்தை தானியேல் கூறினான். அதனால் ராஜா தானியேலுக்கு இரத்தாம்பரத்தைத் தரிப்பித்தான். தானியேலினுடைய கழுத்துக்கு பொற்சரப்பாணியைத் அணிவித்தான். ராஜாவின் ராஜ்ஜியத்திலே தானியேலை மூன்றாம் அதிகாரியாக்கினான். ராஜாவின் ராஜ்ஜியமெங்கும் தானியேலைக் குறித்து பறைசாற்றக் கட்டளையிட்டான் -. தானி 5:29