பெல்ஷாத்ஷார் தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு விருந்து செய்யும்போது தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களில் தானும், தன் பிரபுக்களும், தன் மனைவிகளும், தன் வைப்பாட்டிகளும் திராட்சரசம் குடிப்பதற்குப் பயன்படுத்தினான். அவர்கள் அதைக் குடித்து விட்டு பொன்னும், வெள்ளியும், இரும்பும், வெண்கலமும், கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது மனுஷகைவிரல்கள் தோன்றி சுவரிலே எழுதிற்று. எழுதின அந்த கையுறுப்பை ராஜா கண்டான். அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டு கலங்கினான். ராஜாவின் இடுப்பின் கட்டுகள் தளர்ந்து முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது – தானி 5:1 – 6