Menu Close

பெத்தேல்

இது பாலஸ்தீனாவின் மத்தியிலிலுள்ள ஒரு பேர் பெற்ற இடம். எருசலேமிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஆபிரகாம் இங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனை வணங்கினான். யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்கு வருகிறபோது சூரியன் அஸ்தமித்தபடியால் அங்கே இராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து தலையணையாக வைத்து படுத்துக் கொண்டான். அப்போது ஒரு சொப்பனம் கண்டான். யாக்கோபு விழித்துக் கொண்டு இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல என்றான். தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்தி அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பெயர் வைத்தான். அதற்கு முன் அந்த இடம் லூஸ் எனப்பட்டது – நியா 1:23 பிற்பாடு சாமுவேலும் இந்த இடத்திற்கு வருவது வழக்கம். உடன்படிக்கைப் பெட்டி இங்கே இருந்தது – நியா 20:27. யெரோபெயாம் இங்கே கன்றுக்குட்டி ஒன்றை ஸ்தாபித்தான். எலியாவும் இந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தார். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இங்கே இருந்தார்கள் – 2இரா 2 :2 அசிரிய ராஜாவால் இந்த இடம் அழிக்கப்பட்ட பின்பும் இங்கே ஆசாரியர் இருந்ததாகத் தெரிகிறது – 2இரா 17:28 இப்போதும் இந்த இடம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Related Posts