Menu Close

பிள்ளைகளுக்கான அறிவுரை

▪ சங் 34:11 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.”
▪ சங் 148:12 “பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள்.”
▪ நீதி 10:1 “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்.”
▪ நீதி 20:11 “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.”
▪ நீதி 23:22 “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே.”
▪ பிர 12:1 “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை;”
▪ மாற் 7:10 “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.”
▪ எபே 6:1 – 3 “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.”
▪ “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்”
▪ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.”
▪ கொல 3:20 “பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.”
▪ 1தீமோ 5:4 “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்த குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.”

Related Posts