எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய நாமத்திலே சபித்தான். உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து அவர்களில் 42 பிள்ளைகளைப் பீறிப் போட்டது. எலிசா தங்கள் நாட்டிலிருந்து போகவேண்டுமென்ற அவர்களுடைய ஆவல் தேவசித்தத்திற்கு எதிராக இருந்ததால் தான் எலிசா கர்த்தருடைய நாமத்தில் அவர்களை சபித்தார். கரடிகள் வந்து அவர்களைக் கடித்துக் குதற வேண்டும் என்று அவர் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் அது நிகழ்ந்து விட்டது – 2இரா 2:23, 24