▪ நீதி 3:30 “ஒருவன் உனக்குத் தீங்கு செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.”
▪ நீதி 17:14 “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.”
▪ நீதி 20:3 “வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் அதிலே தலையிட்டுக்கொள்வான்.”
▪ நீதி 25:8 “வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.”
▪ நீதி 26:17 “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.”
▪ பிலி 2:3 “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”
▪ 2தீமோ 2:14 “-கேட்கிறவர்களைக் கவிழ்த்துப் போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்து புத்தி சொல்லு.”
▪ 2தீமோ 2:24 “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.”