Menu Close

பார்வோனின் சமரசத்திட்டங்கள்

1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு உரிமையைக் கொடுத்து, அப்படி இஸ்ரவேலர் செய்யும் பொழுது முழு எகிப்தியரும் இஸ்ரவேலருக்கு எதிராக எழும்ப வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம்.

2. பார்வோனின் இரண்டாவது சமரசத் திட்டம்: யாத் 8:28 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்;” தூரத்தில் செல்லாமலிருந்தால், பார்வோன் அழைக்கும் போது அவர்கள் திரும்பி வரவேண்டும் என்பது அவரது திட்டம்.

3. பார்வோனின் மூன்றாவது சமரசத் திட்டம்: யாத் 10:11 “புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்;” புருஷர்கள் மட்டும் ஆராதனைக்குச் சென்றால் மிக விரைவில் தன் மனைவி, பிள்ளைகளைப் பார்க்க வந்து விடுவார்கள் என்பது பார்வோனின் திட்டம்.

4. பார்வோனின் நான்காவது சமரசத் திட்டம்: யாத் 10:24 “நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.” பலியிடுவதற்கு ஆடுமாடுகள் இல்லாமல் எப்படி பலியிடமுடியும். அந்த தந்திரத்தில் தான் பார்வோன் கூறினான். பல சமரச திட்டங்களை பார்வோன் கொண்டு வந்தும், அவைகளில் ஒன்றையும் மோசே பக்தன் ஏற்கவில்லை.

Related Posts