Menu Close

பாபேல் நிகழ்ச்சியும் பெந்தெகொஸ்து நிகழ்ச்சியும்

1. பாபே: உலகமெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும், ஒரே இடத்தாரும் – ஆதி 11:1
பெந்: அரேபிய, கிரேக்க மொழி பேசும் பல இடத்தைச் சார்ந்தோர். பலவிதமான பேச்சுடையோர்.

2. பாபே: சிநெயார் சம பூமியில் நிகழ்ந்தது – ஆதி 11:2
பெந்: மேல் வீட்டறையில் நிகழ்ந்தது – அப் 1:13, 2:1

3. பாபே: பேர் உண்டாகப் பண்ணக் கூடினர் – ஆதி 11:4
பெந்: தேவ வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருந்தனர் – அப் 1:5

4. பாபே: தேவசித்தத்துக்கு மாறாகக் கூடினர் – ஆதி 11:6
பெந்: தேவசித்தத்தின் படி கூடினர்.

5. பாபே: மனிதர் செங்கலைச் சுட்டனர். களிமண்ணால் கட்டினர் – ஆதி 11:3
பெந்: தேவன் ஜீவனுள்ள கற்களை உருவாக்கினார். ஆவியினால் கட்டினார் – எபி 12:22

6. பாபே: மனமேட்டிமையால் கோபுரம் அமைத்தனர் – ஆதி 11:4
பெந்: தாழ்மையால் காத்திருந்தனர்.

7. பாபே: கர்த்தர் கட்டிடத்தை அழிக்க இறங்கினார் – ஆதி 11:5
பெந்: ஆவியானவர் சபையைக் கட்ட இறங்கினார்.

8. பாபே: விக்கிரக ஆராதனைக்கும் தேவனுக்கும் எதிராக கட்டப்பட்டது.
பெந்: தேவ ஆராதனைக்கும் கிருபையின் இரட்சிபுக்கும் தொடக்கமாக அமைந்தது.

9. பாபே: மனிதன் புரட்சியுடன் ஏறினான். தேவன் நியாயத்தீர்ப்புடன் இறங்கினார் ஆதி 11:7

10. பெந்: மனுஷகுமாரன் பிதாவின் வலதுபாரிசத்துக்கு ஏறினார். ஆவியானவர் ஆசீர்வாதமுடன் இறங்கினார் – யோ 16:7

11. பாபே: ஒரே மொழியைப் பேசினார். பல பொருட்களில் கேட்டனர். அர்த்தமுள்ள பலமொழிகள் பிரிந்தன ஆதி 11:7
பெந்: ஒரே மொழியைப் பேசினார். பல மொழிகளை பேச்சு வழக்கில் கேட்டனர்.

12. பாபே: பிரிவினை உருவானது – ஆதி 11:9
பெந்: சேர்ப்பு நிகழ்ந்தது.

Related Posts