அகசியா பாகால் சேபூவிடம் பரிகாரம் தேடினபடியால் “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். அகசியா இதைக் கேள்விப்பட்டு எலியாவை அழைத்து வர ஐம்பது சேவகரையும், ஒரு தலைவனையும் அனுப்பினான். அவர்கள் எலியாவை அணுகினபோது எலியாவின் வேண்டுதலின்படி வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போட்டது அகசியா மறுபடியும் ஐம்பது பேரை அனுப்பினான். அவர்களையும் அக்கினி பட்சித்தது. மூன்றாம் முறையும் அனுப்பினான். அந்தத் தலைவன் எலியாவை பணிந்து மன்றாடினான். எலியா அவர்களுடனே கூட ராஜாவிடம் சென்று “கர்த்தர் சொன்னபடி நீ சாவாய்” என்றான். அதன்படியே செத்தான் – 2இரா 1:3 – 16