1. பழைய ஏற்பாடு கட்டளையின் ஒப்பந்தம்.
புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் மூலமாக வந்த கிருபையின் ஒப்பந்தம் – யோ 1:17.
2. பழைய ஏற்பாடு சீனாய் மலையைச் சுற்றியுள்ள செய்திகளைக் கூறுகிறது.
புதிய ஏற்பாடு கல்வாரி மலையைச் சுற்றியுள்ள செய்திகளைக் கூறுகிறது.
3. பழைய ஏற்பாடு மோசேயோடு தொடர்புள்ள செய்திகளைக் கூறுகிறது.
புதிய ஏற்பாடு இயேசுவோடு தொடர்பான செய்திகளைக் கூறுகிறது.
4. பழைய ஏற்பாடு இறைவனோடு தொடங்குகிறது – ஆதி 1:1
புதிய ஏற்பாடு இயேசுவோடு தொடங்குகிறது – மத் 1:1.
5. பழைய ஏற்பாட்டின் நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றோடு பொருந்தி, தொடர்ச்சியான செய்திகளைக் கூறுவது புதிய ஏற்பாடு ஆகும்.
பழைய ஏற்பாட்டை இயேசு விண்ணுலக வாழ்வை விட்டு மண்ணுலகிற்கு வருவதற்கு ஒரு ஆயத்தமாகக் கொள்ளலாம்.
6. பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் முதல் மல்கியா வரை “தேவன்” என்றும், “கர்த்தர்” என்றும் “ஆண்டவர்” என்றும் அறியப்பட்டார்.
புதிய ஏற்பாட்டில் “கர்த்தராகிய இயேசு” என்று அறியப்படுகிறார்.
7. பழைய ஏற்பாட்டில் இல்லாத ஒன்று சுவிசேஷம் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் ஆரம்பத்திலேயே தேவதூதன் இந்த நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று சொன்னார். இயேசுவே அந்த நற்செய்தி. இயேசுவே அந்த சுவிசேஷம்.
8. பழைய ஏற்பாட்டில் அக்கிரமமான கிரியை பாவமாகும்.
புதிய ஏற்பாட்டிலோ தவறான நோக்கமே பாவமாகும்.
9. “கொலை செய்யாதிருப்பாயாக.” என்பது பழைய ஏற்பாடு.
புதிய ஏற்பாட்டில் “சகோதரனைப் பகைக்கிறவன் கொலைபாதகன்” என்று கூறுகிறது
10. பழைய ஏற்பாட்டில் ”கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், ஜீவனுக்கு ஜீவன்.” என்று கூறப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டில் “தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.” “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு.” என்று உள்ளது.
11. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதர் மேல் இரங்குவார். நிறைவேற்ற வேண்டிய காரியங்களை நிறைவேற்றுவார். பின்பு போய் விடுவார்.
புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் நிரந்தரமாய் நம்மோடு தங்கியிருப்பார். நம்மை தேவனுடைய ஆலயமாக மாற்றுவார்.
12. பழைய ஏற்பாட்டில் எருசலேம் தேவாலயத்திலும், பத்து கோத்திரங்களும் சேர்ந்து கெர்சீம் மலையிலும் மட்டும் ஆராதனை செய்தனர்.
புதிய ஏற்பாட்டில் ஆவியோடும், கருத்தோடும் எல்லா இடங்களிலும் தொழுது கொள்கிறோம்.
13. பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள் என்ற மூன்று வித ஊழியர்களைப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், சிலரை போதகராகவும் ஏற்படுத்தினார்.
காலங்கள்